பெண் போலீஸாருக்கு சிறப்பு பயிற்சி

சென்னையில் பெண் காவலர்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு சம வாழ்வு முறை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை காவல்துறையில் சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு போக்குவரத்து பிரிவு மத்திய குற்றப்பிரிவு, சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் பெண் காவலர்கள் முதல் பெண் இன்ஸ்பெக்டர் வரை சுமார் 4800 பெண் போலீஸாருக்கு காவல் பணியிலும் வாழ்க்கையிலும் திறம்பட செயல்பட்டு வெற்றி பெற வாழ்க்கையிலும் வேலையிலும் சம வாழ்வு முறை என்ற 3 நாட்கள் சிறப்பு பயிற்சியை செப்டம்பர் 24ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

பயிற்சி முகாமில் பெண் காவலர்கள்

இந்த பயிற்சி முகாம் வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமை ஆகிய மூன்று நாள்களுக்கு ஒரு குழு என 64 குழுக்களுக்கு என 4800 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியில் பெண் காவலர்கள் பணியிலும் குடும்ப வாழ்விலும் திறம்பட செயல்பட்டு வெள்ள பெறுவதற்கான சில பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சியோடு கண், காது, மூக்கு, தொண்டை, ரத்த அழுத்தம், நீரிழிவு, கர்ப்பப்பை வாய் புற்று நோய், மார்பக புற்று நோய் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது.

பயிற்சி முகாமில் பெண் காவலர்கள்

இந்த பயிற்சியில் 3வது குழுக்களான 2வது வகுப்பு இன்று புதுப்பேட்டை ஆயுதப்படை துணை கமிஷனர் அலுவலக வளாகத்தில் நடந்தது. டாக்டர் ராஜன் முத்துகிருஷ்ணன், பெண்கள் நலம் குறித்து பயிற்சி வகுப்பினை நடத்தினார். இணை கமிஷனர் சாமுண்டீஸ்வரி கலந்து கொண்டு பேசினார். பயிற்சியில் ஆர்வமாக பெண் காவலர்கள் கலந்து கொண்டனர். நன்றி வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *