திருப்பூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சிதம்பரசாமி தமிழக பா.ஐ.கவின் மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்ட பிறகு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுவருகின்றனர். தமிழக பா.ஜ.கவில் கூண்டோடு நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே பலருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்ட நிலையில் கடந்த 15-ம் தேதி முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில துணை தலைவர்களாக தென்சென்னையைச் சேர்ந்த சந்திரலேகா ஐஏஏஸ் ஓய்வு, திருப்பூரைச் சேர்ந்த சிதம்பரசாமி ஐபிஎஸ் ஓய்வு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில செயலாளர்களாக ராஜேந்திரன், டி.கே.நடராஜன் (ஏடிஎஸ்பி ஓய்வு), ஆதித்யன் விஜயாளன், ஆறுமுகம், ராமசந்திரன், குருஸ்ரீனிவாசன், முரளி, மோகன்குமார், ராஜரத்தினம், சங்கரன், ஜனகரத்தினம், கருப்பசாமி, கலைசெல்வன், பிரபு, கிரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சந்தன கடத்தல் வீரப்பன் மகள் வித்யா, நடிகர் ராதாரவி, சினிமா இயக்குனர்கள் கஸ்துாரிராஜா, கங்கை அமரன், முன்னாள் அமைச்சர் ஹண்டே உட்பட பலருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.