மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர்

மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா காலத்தில் சில அரசு அலுவலர்கள் மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பனை, அரசின் இலவச சேவைகளுக்கு லஞ்சம் பெறுவது உள்ளிட்ட மனிதநேயற்ற செயல்படிகளில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

தவறு செய்யும் அரசு அலுவலர்கள் மீது பணிநீக்கம் உள்பட துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மக்களின் உயிர் காக்கும் பணியில் அரசு முழு முனைப்போடு ஈடுபட்டு வருகிறது. ஒரு சிலரால் அவப்பெயர் ஏற்படுவதை ஏற்க முடியாது என்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *