சென்னையில் 3 வயது குழந்தைக்கு டி.வி-யால் நேர்ந்த சோகம்

சென்னை தாம்பரம் அடுத்த அகரம்தென் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் பாலாஜி . இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார் .இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள்மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

இதில் இரண்டாவது மகனின் பெயர் கவியரசு (3) . இவர் நேற்று இரவு அலமாறியில் உள்ள டிவி அருகில் இருந்த செல்போனை எடுக்க முயன்றுள்ளார் அப்போது டிவி குழந்தையின் சதலையில் விழுந்தது .அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர்.

கவியரசுவை மீட்டு ஆம்பலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவியரசுவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து உடலை கைப்பற்றிய சேலையூர் போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனண நடத்தினர்.விசாரணையில் டிவி அருகில் வைக்கப்பட்டிருந்த செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது.

சத்தம் கேட்டு கவியரசு செல்போனை எடுக்க முயன்றுள்ளார். சார்ஜரில் செல்போன் போட்டிருந்த்தால் செல்போனை எடுக்க முடியவில்லை.

மேலும் சார்ஜரின் வயர், டிவியின் அடியில் சிக்கியிருந்த்தால் அதை பிடித்து இழுத்தபோது டிவி கீழே விழுந்துள்ளது. அதில் சிக்கிக் கொண்ட கவியரசு உயிரிழந்த்து தெரியவந்த்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *