காதல் திருமணம்; கருத்துவேறுபாடு; 2-வது திருமணம் – 4 வயது குழந்தைக்கு எமனான சிக்கன் பீஸ்

கோவையில் 4 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கன் பீஸ் சிக்கியதால் மூச்சுதிணறி அவன் உயிரிழந்துவிட்டதாக அவரின் தாய் கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிங்கியின் முதல் கணவர் புகாரளித்துள்ளார்.

கோவையில் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் காமாட்சி. இவர் அசாமை சேர்ந்த பிங்கியை (26) திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு 4 வயதில் கபிலேஷ் என்ற மகன் இருந்தார்.

கருத்து வேறுபாடால் கணவனை விட்டு பிரிந்த பிங்கி லிங்கேஷ் என்பவருடன் வடவள்ளியில் வாழ்ந்து வந்துள்ளார். குழந்தை கபிலேஷ் சிக்கன் சாப்பிட்ட நிலையில் அது அவரின் தொண்டையில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகும் கபிலேஷை காப்பாற்ற முடியாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆனால் தன் மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக காமாட்சி தெரிவித்த நிலையில் வடவள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தையின் சடலம் தந்தை காமாட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

வடவள்ளி காவல் நிலையத்தில் பிங்கி கொடுத்த புகாரில், “நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். என்னுடைய சொந்த மாநிலம் அஸ்ஸாம் கௌஹாத்தி. எனது பெற்றோர் அஸ்ஸாமில் உள்ளனர்

. நான் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கோவைக்கு வந்து எனது தோழிகளுடன் ஒரு பாக்கு தொழிற்சாலையில் வேலைப்பார்த்து வந்தேன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வேலை செய்யும் இடத்தில் அறிமுகமான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காமாட்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.

எங்களுக்கு கபிலேஷ் என்ற மகன் உள்ளான். அவனுக்கு 4 வயதாகுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன் என்து கணவர் காமாட்சிக்கும் எனக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு என்னை விட்டு அவர் தனியாக பிரிந்து சென்றுவிட்டார்.

தனியாக இருந்த நான் எங்கள் பகுதியில் ஆட்டோவில் தண்ணீர் சப்ளை செய்யும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த லிங்கேஷ் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டேன். எனது மகன் கபிலேஷ், லிங்கேஷ், நான் ஆகிய மூன்று பேரும் ஒரே வீட்டில் குடியிருந்து வருகிறோம்.

29-ம் தேதி லிங்கேஷ், சிக்கன் எடுத்து கொண்டு வந்து சமைக்குமாறு கூறினார். அதன்படி நான் சிக்கன் சமைத்தேன். பின்னர் மதியம் 1.45 மணியளவில் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டோம். சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்தில் கபிலேஷ் கதறி அழுதான்.

நானும் லிங்கேசும் குழந்தையை பார்க்க அவன் மூச்சு விட சிரமப்பட்டு அழுது கொண்டே இருந்தான். உடனே நாங்கள் அவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்குள்ள டாக்டர்கள், கபிலேஷின் உடல்நலம் மோசமாக இருக்கிறது.

கோவை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லும்படி கூறினர். அதன்படி அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கபிலேஷை கொண்டு சென்றோம். கபிலேஷை பரிசோதித்த டாக்டர்கள் அவன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகக் கூறினர்.

இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். பிங்கிக்கு தமிழ் பேச தெரியும். ஆனால் எழுத தெரியாது. அதனால் லிங்கேஷின் நண்பர், பிங்கி சொன்னதை எழுதி அவரிடம் படித்து காண்பித்துள்ளார் என்று எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்பேரில் எஸ்.ஐ ராமசந்திரன் 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.சிக்கன் பீஸ் 4 வயது குழந்தையின் உயிரை காவு வாங்கிய சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *