சீனாவை அச்சுறுத்தும் புதிய வைரஸ்

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகர் வூஹானில் கொரோனா வைரஸ் முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் கடந்த செப்டம்பர் முதலே அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


வவ்வால்களின் உடலில் கொரோனா வைரஸ் ஒட்டுண்ணியாக வாழ்கிறது. இந்த வைரஸால் வவ்வால்களுக்கு பெரிய பாதிப்பு கிடையாது. ஆனால் மனிதர்களுக்கு கொரோனா வைரஸால் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. நுரையீரல், இதர முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் தொற்றுள்ள வவ்வாலை சாப்பிட்ட பாம்பு வூஹானில் உள்ள மீன் சந்தையில் விற்கப்பட்டுள்ளது. அந்த பாம்பு இறைச்சியை சாப்பிட்ட நபர்களுக்கு முதலில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இவ்வாறு வவ்வாலிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக சீன விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


தற்போது சீனாவில் பன்றிகளிடம் ‘ஜி4இஏ எச்1என்1′ என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் ஆபத்து உள்ளது. கொரோனா வைரஸ் போன்று ஜி4இஏ எச்1என்1’ வைரஸும் உலகம் முழுவதும் பரவக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
எனவே ஆரம்ப கட்டத்திலேயே புதிய வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *