குளோரின் கலக்காத குடிநீர் கொண்டு சென்றால் அபராதம்

குளோரின் கலக்காத குடிநீர் கொண்டு சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தண்ணீரால் நோய்களை தடுக்க குடிநீரில் குளோரின் கலக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

“மழைக்கால நோய்களை தடுக்க தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 23,952 இடங்களில் குடிநீர் லாரிகள் சோதனை செய்யப்படுகின்றன. குளோரின் கலக்காத குடிநீரை கொண்டு சென்றால் அபராதம் விதிக்கப்படும். தனியார் குடிநீர் நிறுவனங்கள் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பர்ற வேண்டும். நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *