சி.ஏ. தேர்வுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்

சி.ஏ. தேர்வுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கு தணிக்கையாளர் என்ற ஆடிட்டர் பணியில் சேர சி.ஏ. என்ற சார்ட்டட் அக்கவுன்டன்ட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அடிப்படை தகுதித் தேர்வு, இடைநிலைத் தேர்வு, இறுதித் தேர்வு என 3 கட்டங்களாக சி.ஏ. தேர்வு நடைபெறுகிறது.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே சி.ஏ. தேர்வு எழுத முடியும். இந்நிலையில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறுபவர்களும் இனிமேல் சி.ஏ. தேர்வுகளை எழுதலாம் என்று இந்திய சார்ட்டட் அக்கவுன்டன்ட் அமைப்பான ஐசிஏஐ அறிவித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கல்வித் தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சியாக உயர்த்தப்பட்டது. தற்போது சிஏ தேர்வுக்கு மீண்டும் 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது என்று அறிவிக்கப்பட்டிருப்பதை மாணவ, மாணவியர் வரவேற்றுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *