14 தொலைக்காட்சிகள் வாயிலாக வகுப்புகள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தனியார் பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தி வருகின்றன. இதைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்காக தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்தும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.


இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: நாட்டிலேயே முதன்முறையாக தொலைக்காட்சி சேனல்கள் மூலம் தமிழக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் 14 தொலைக்காட்சி சேனல்கள் மூலமாக பாடங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பள்ளிகள் திறப்பு குறித்து 18 பேர் குழு ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்துள்ளது. அவற்றை செயல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *