விரைந்து பட்டா வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்து கலெக்டர்களுடன் சனிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
“தமிழகத்தில் இந்த ஆண்டு 1.6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுவரை 782 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
வீட்டு மனை பட்டா வழங்கும் நடவடிக்கைகளை கலெக்டர்கள் விரைவுபடுத்த வேண்டும். பட்டா மாறுதல் கேட்டுள்ள விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பன உட்பட பல்வேறு அறிவுரைகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.