முதல்வர் பழனிசாமி தாயார் காலமானார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.
தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வயது 93.
கடந்த இரண்டு நாட்களாக சேலம் தனியார் (லண்டன் ஆர்த்தோ) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை 12.15 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்துக்கு தவசாயியின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய சென்ற முதல்வர் பழனிசாமி தனது தாயாரின் மறைவு செய்தி கேட்டு சாலை மார்க்கமாக சேலம் விரைந்தார்.
அமைச்சர்கள், அதிமுக மூத்த தலைவர்கள் தவசாயி அம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சிலுவம்பாளையத்தில் அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.