கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தின் சில தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி ட்விட்டர் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலித்த சென்னை கீழ்ப்பாக்கம் Bewell தனியார் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.