சென்னை புறநகர் ரயில் சேவையை தொடங்க முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. ஆனால் ஏழைகளின் முக்கிய போக்குவரத்தான புறநகர் ரயில் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை.
இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், சென்னையில் புறநகர் ரயில்களை இயக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வட்டாரங்கள் கூறும்போது, “நாட்டின் இதர மாநிலங்களில் புறநகர் ரயில் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் ரயில்வே வாரியம்தான் முடிவு எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தன.