ஊரடங்கில் மேலும் தளர்வா? 29-ம் தேதி முதல்வர் ஆலோசனை

ஊரடங்கில் மேலும் தளர்வா? 29-ம் தேதி முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி நாடு முழுவிய ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. கடந்த மே 31-ம் தேதி வரை ஊரடங்கு கண்டிப்புடன் அமல் செய்யப்பட்டது.

ஜூன் 1-ம் தேதி முதல் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமல் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஊரடங்கில் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு வரும் 30-ம் தேதி நிறைவடைகிறது.

இதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி வரும் 29-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். மருத்துவ நிபுணர்களின் கருத்துகளையும் கேட்டறிகிறார்.

அவர்கள் அளிக்கும் ஆலோசனைகளின்படி அக்டோபர் மாதமும் ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது முழுமையாக ஊரடங்கை விலக்கிக் கொள்ளலாமா என்பதை முதல்வர் முடிவு செய்ய உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *