கோயம்பேடு, மதுரவாயல் பகுதிகள் சென்னை காவல் ஆணையரக கட்டுப்பாட்டில் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் துறையை பிரித்து ஆவடி, தாம்பரம் என புதிதாக இரு காவல் ஆணையரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய காவல் ஆணையரகங்களின் எல்லை வரையறுக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
விமான நிலையம், மடிப்பாக்கம், நந்தம்பாக்கம், ராயலா நகர், மதுரவாயல், கொடுங்கையூர், திருவொற்றியூர், தி.நகர், கோயம்பேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை, கானாத்தூர் உட்பட்ட பகுதிகள் சென்னை காவல் ஆணையரின் கட்டுப்பாட்டிலேயே தொடரும் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.