தமிழகம் முழுவதும் 6 இடங்களில் ரூ.100 கோடியில் நவீன குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட உள்ளன.
இதன்படி அம்பத்தூர் தாய் வளாகத்தில் புதிதாக நவீன குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட உள்ளன. இங்கு 5 ஆயிரம் மெட்ரின் டன் கொள்ளளவு கொண்டதாக இருக்கும். இதேபோல செங்குன்றம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2 ஆயிரம் மெட்ரின் டன் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட உள்ளது.
சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூட்டம், கோவை சூலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம், தூத்துக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடம், மதுரை மாவட்டத்தில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட உள்ளன.
இந்த குளிர்பதன கிடங்குகள் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று வேளாண் விற்பனைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.