அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 3.12 லட்சம் பேர் விண்ணப்பம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு கடந்த 20-ம் தேதி முதல் ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். இதுவரை 3 லட்சத்து 12 ஆயிரம் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இதில் 2 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்டணம் செலுத்தியுள்ளனர்.


விண்ணப்ப பதிவு ஜூலை 31-ம் தேதியுடன் முடிந்த நிலையில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் சான்றிதழ் பதிவேற்றம் தொடங்குகிறது. வரும் 10-ம் தேதி வரை ஏற்கெனவே விண்ணப்பித்த இணைய முகவரியிலேயே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம்.

மாணவர்களின் நலன் கருதி கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *