அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 87,000 இடங்கள் உள்ளன. இதில் சில கல்லூரிகளில் கணிசமான இடங்கள் நிரப்பப்படவில்லை.
இதை கருத்தில் கொண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
“ஏற்கெனவே இணையவழியில் விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களுடன் கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யலாம்.
மறுஅறிவிப்பு வரும் வரை புதிய மாணவர் சேர்க்கையை கல்லூரிகள் நடத்திக் கொள்ளலாம்” என்று கல்லூரிக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.