கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு நவ. 1-ல் தொடங்குகிறது

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் கல்லூரி இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு நடப்பு ஆண்டுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை இன்று வெளியிட்டது.

“நாடு முழுவதும் செயல்படும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1-ம் தேதி வகுப்புகளைத் தொடங்க வேண்டும்.

அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் 7-ம் தேதி வரை விடுமுறை அளிக்க வேண்டும். மார்ச் 8 முதல் 26-ம் தேதிக்குள் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும். மார்ச் 27 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை விடுமுறை வழங்க வேம்டும்.

அதன்பிறகு கல்வி ஆண்டின் 2-ம் பருவம் ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கப்பட வேண்டும். ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை விடுமுறை வழங்க வேண்டும். ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தேர்வுகளை நடத்த வேண்டும்.

அதன்பின் ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை விடுமுறை அளிக்க வேண்டும். 2021-22 புதிய கல்வியாண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்கப்பட வேண்டும்” என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *