கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டுதல் நெறிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பொறியியல் உட்பட அனைத்து கல்லூரிகளிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு டிச.7-ம் தேதி திங்கள்கிழமை வகுப்புகள் தொடங்குகின்றன. இதுதொடர்பான வழிகாட்டு நெறிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
“கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் கல்லூரிகளை திறக்கக்கூடாது. அப்பகுதியில் வசிக்கும் மாணவர்களை கல்லூரிக்கு வர அனுமதிக்கக்கூடாது. முகக்கவசம், தனிநபர் இடைவெளி, கிருமிநாசினி பயன்பாட்டை மாணவர்கள், ஆசிரியர்கள் பினபற்ற வேண்டும்.
50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகளை நடத்த வேண்டும். வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்கக்கூடாது. இணையதள வகுப்புகளையும் தொடர வேண்டும்.
விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வேண்டும். உறவினர் வீடுகளில் மாணவர்கள் தங்க அனுமதி வழங்க வேண்டும்” என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.