செப்டம்பருக்குள் செமஸ்டர் தேர்வு

நாடு முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் வரும் செப்டம்பருக்குள் இறுதி செமஸ்டர் தேர்வை நடத்த யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.


கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறது.


“நாடு முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வரும் செப்டம்பருக்குள் இறுதி செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும். இறுதி செமஸ்டர் தேர்வை எழுத இயலாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வை நடத்த வேண்டும்” என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *