தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகள் நடைமுறையில் இருந்தன. இந்த சுழற்சி முறை வகுப்பு நடைமுறையை உயர் கல்வித் துறை ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி இனிமேல் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஒரே ஷிப்டாக வகுப்புகள் நடத்தப்படும். மதியம் 1.30 முதல் 2.30 மணி வரை மதிய இடைவெளியாகும். தினமும் 6 வேளை பாடங்கல் நடத்தப்பட வேண்டும்.
நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து அரசு கல்லூரிகளிலும் இந்த புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் (பொறுப்பு) விவேகானந்தன் உத்தரவிட்டுள்ளார்.