தமிழக மின் வாரியத்தில் 44 மின் பகிர்மான மாவட்டங்கள் உள்ளன. இந்த மின் பகிர்மான மாவட்டங்களில் கணினி மின் தடை நீக்கும் மையம் உள்ளது. இந்த மையத்தை 1912 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் மின் தடை குறித்து புகார் அளிக்கலாம். ஆனால் பெரும்பாலான நேரம் தொடர்பு எண் பிசியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பிர்சசினைக்கு தீர்வு காண சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நவீன கணினி மின் தடை நீக்கும் மையத்தை அமைக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது. புதிய மையம் செயல்பாட்டுக்கு வந்தால் தமிழகம் முழுவதும் உள்ள நுகர்வோர் 1912 என்ற எண்ணில் மின்தடை புகார்களை அளிக்க முடியும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.