வர்த்தக சமையல் காஸ் சிலிண்டர் ரூ.78 விலை உயர்ந்துள்ளது.
வீடு, வர்த்தக சமையல் காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதத்துக்கான வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆனால் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் வர்த்தக சமையல் காஸ் சிலிண்டர் ரூ.78 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் வர்த்தக சமையல் காஸ் சிலிண்டர் ரூ.1,354-க்கு விற்கப்படுகிறது.