தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைநிலை அலுவலர்களை கோட்ட மாறுதலை செய்ததைக் கண்டித்து வணிக வரிச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக மதுரை வணிக வரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை கோட்டத் தலைவர் அக்பர்பாட்சா மற்றும் சரவணப் பெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினர். அலுவலர் சங்க மாநில நிர்வாகி முருகேசன், மீனாட்சி, குணாளன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் சோ. நடராஜன் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் 80 பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மதுரையைப் போல தமிழகம் முழுவதும் இந்த ஆர்பாட்டம் நடந்தது.
இதுகுறித்து கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் முருகேசன் கூறுகையில், வணிக வரித்துறை அமைச்சரின் தலையீட்டின் பேரில் விதிகளுக்கு முரணாக வழங்கப்பட்டுள்ள பணி மாறுதல்களை ரத்து செய்யவில்லை எனில் வேலை நிறுத்தம் வரை செல்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே முதல்வர் உடனடியாக தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.