செங்கல்பட்டு-சிங்கபெருமாள் கோவில் 3-வது ரயில் பாதை

செங்கல்பட்டு-சிங்கபெருமாள் கோவில் 3-வது பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தொலைவுக்கு 3-வது பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி 3 கட்டங்களாக நடைபெறுகிறது. தற்போது செங்கல்பட்டு-சிங்கபெருமாள்கோவில், சிங்கபெருமாள்கோவில்-கூடுவாஞ்சேரி வரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இறுதிகட்டமாக கூடுவாஞ்சேரி-தாம்பரம் வரை பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இம்மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் செங்கல்பட்டு-சிங்கபெருமாள்கோவில் இடையே ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் கடந்த புதன்கிழமை 9 பெட்டிகளை கொண்ட ரயிலை மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை மேற்கொண்டார். 

பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்த பிறகு 3-வது பாதையில் ரயில் சேவை தொடங்கப்படும். பயணிகளின் தேவைக்கு ஏற்ப மின்சார ரயில்களின் சேவை அதிகரிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *