விபத்தில் பலியான காவலர்கள் குடும்பத்துக்கு ரூ.28 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்த கார்த்திக், ரவீந்திரன் ஆகியோர் கோயம்பேடு பஸ் முனைய பாதுகாப்பு பணிக்கு கடந்த பிப்ரவரி 19-ம் தேதி பைக்கில் சென்றனர். அம்பத்தூர் எஸ்டேட் சந்திப்பில் பைக் மீது கார் மோதியது. இதில் கார்த்திக்கும் ரவீந்திரனும் உயிரிழந்தனர்.
இருவரின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில் காவலர்களிடம் சுயவிருப்பத்தின்பேரில் ரூ.28 லட்சம் வசூல் செய்யப்பட்டது. 2 பேரின் குடும்பத்தினரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்த கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், தலா ரூ.14 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.