சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 36). மீன் வியாபாரியான இவர் கடந்த 2016 மே மாதம் சாலிகிராமம், தசரதபுரம் அருகே பைக்கில் சென்றபோது அதிவேகமாக வந்த லாரி மோதி உயிரிழந்தார்.
இதுதொடர்பான வழக்கை சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் விசாரித்தது. உயிரிழந்த வடிவேலுவின் மனைவி ரேவதிக்கு நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.22.11 லட்சத்தை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று விசாரணை நீதிபதி சுதா உத்தரவிட்டுள்ளார்.