சென்னை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 28). இவர் கடந்த 2015 ஜூலையில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கை சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் விசாரித்தது.
விபத்தில் உயிரிழந்த சகாதேவனின் தாய் பூங்காவனத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நீதிபதி சிவசக்தி உத்தரவிட்டார். இந்த இழப்பீட்டு தொகையை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.