விபத்தால் மாற்றுத்திறனாளியான வழக்கறிஞருக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு

விபத்தால் மாற்றுத்திறனாளியான வழக்கறிஞருக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நன்மங்கலத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 35). கடந்த 2010-ம் ஆண்டு ஜூனில் ராஜீவ் காந்தி சாலை சுங்கச்சாவடி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மேக்ஸி டிரக் மோதியதில் பிரபு பலத்த காயமடைந்தார். இதில் அவர் மாற்றுத்திறனாளியானார்.

இதுதொடர்பான வழக்கை சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் விசாரித்தது. நீதிபதி சிவசக்தி விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கினார்.

“விபத்தில் மாற்றுத்திறனாளியான பிரபுவுக்கு 53 சதவீத உடல் ஊனம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியும் வழங்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *