ஏடிஎம்-ல் பணம் வரவில்லையா? வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது சில நேரங்களில் பணம் வராமல், பணம் பிடித்தம் செய்யப்பட்டிருப்பதாக எஸ்எம்எஸ் வருகிறது.
இந்த சூழ்நிலையில் குறிப்பிட்ட காலத்துக்குள் வங்கி நிர்வாகங்கள் வாடிக்கையாளருக்கு பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும்.
ஆனால் பணத்தை திருப்பிச் செலுத்த அதிக காலஅவகாசம் எடுத்துக் கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது குறிப்பிட்ட காலஅவகாசத்துக்குள் வாடிக்கையாளருக்கு பணத்தை திருப்பி செலுத்தவில்லை என்றால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு வங்கி நிர்வாகங்கள் இழப்பீடு வழங்க வேண்டும்.
ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாயை இழப்பீடாக அளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.