வீட்டை ஒப்படைக்க தாமதம்.. ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு

வீட்டை ஒப்படைக்க தாமதம்.. ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவை பேரூர் பிரதான சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. இதில் வீடு வாங்க ராஜசேகர் என்பவர் ரூ.18 லட்சத்தை செலுத்தினார். குறிப்பிட்ட காலத்தில் தனியார் நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை. இதுதொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணையத்தில் ராஜசேகர் புகார் செய்தார். 

மனுதாரர் ராஜசேகர் செலுத்தி ரூ.18.06 லட்சத்தை வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும். பத்திரப்பதிவு செலவு ரூ.39,990, இழப்பீடாக ரூ.50,000, வழக்கு செலவுக்கு ரூ.25,000-ஐ கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும் என்று ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அதிகாரி சரவணன் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *