நடிகை வனிதா மீது மீண்டும் புகாரளித்த எலிசபெத்

நடிகை வனிதாவை திருமணம் செய்த எனது கணவர் பீட்டர்பால் மீது நடவடிக்கை எடுக்க தவறிய வடபழனி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்ய வேண்டும் என புகாரளிக்கப்பட்டுள்ளது.

துணை கமிஷனரிடம் புகார்


சென்னை சாலிகிராமம், நேருநகர், சாஸ்திரி தெருவைச் சேர்ந்த பீட்டர் பால் என்பவரின் மனைவி எலிசபெத் ஹெலன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் விசாரிக்கும் சிறப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் புகாரளித்தார்.


அதில் கூறியிருப்பதாவது, எனது தாயாரின் பராமரிப்பில் நானும் எனது இரண்டு குழந்தைகளும் உள்ளோம். எனக்கும் பீட்டர் பாலுக்கும் கடந்த 3.7.2000 அன்று கிறிஸ்தவ முறைப்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு சாலிகிராமம் திருவேங்கடசாமி சாலை கண்ணபிரான் காலனி ரோஸ் கார்டன் அப்பாட்மெண்டில் நானும் எனது கணவர் பீட்டர் பாலும் குடும்பம் நடத்த தொடங்கினோம்.

குடிப்பழக்கம்

எங்களுக்கு முதலில் ஆண் குழந்தை ஜான் எட்வர்ட் பிறந்தான். அவனுக்கு தற்போது 19 வயதாகுகிறது. பெண் குழந்தைக்கு 8 வயதாகிகிறது. எனது கணவர் பீட்டர் பால் பிரசாத் ஸ்டுடியோவில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பிரிவில் வேலை செய்து வந்தார். அவர் வேலைக்கு சரிவர போய் வருவது கிடையாது.


குடிப்பழக்கத்தால் எனக்கும் என் கணவர் பீட்டர்பாலுக்கும் அடிக்கடி சண்டை வரும். சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் அவரை குடிபழக்கத்திலிருந்து மீட்பதற்கு முகலிவாக்கத்தில் உள்ள சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கிருந்து தப்பித்து வரும்போது அவருக்கு அடிப்பட்டு காயங்கள் ஏற்பட்டன. அதன்பிறகு அவரது தாயார் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இருந்தாலும் அவர் குடிப்பழக்கத்திலிருந்து மீளவில்லை.

தொடர்பில் இருந்தார்


வேலைக்கு சரிவர போகாததால் குடும்பத்தை வைத்து காப்பாற்றுவதற்கு சிரமப்பட்டு நான் என் அம்மா வீட்டிற்கு 2016 ஏப்ரல் மாதம் சென்றுவிட்டேன். இருப்பினும் பீட்டர் பால் என்னுடனும் எனது குழந்தைகளுடனும் தொடர்பில் நான் இருந்தார்.

கடைசியாக 20.2.2020 அன்று பீட்டர் பாலின் சகோதரர் மகளுக்கு நடந்த நிச்சயதார்த்த விழாவிற்கு என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். நாங்கள் அந்த திருமண நிச்சயதார்த்தத்தில் ஒன்றாக இருந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

எலிசபெத்

வனிதாவால் அதிர்ச்சி


இதற்கிடையே நடிகை வனிதா விஜயகுமார், மூன்றாவது திருமணம் செய்ய இருப்பதாக கூறி சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டார். நான் யார் என்று பார்க்கும்பொழுது அது என் கணவர் பீட்டர் பால் என்பது தெரியவந்தது. நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். நான் அவரை அணுகியபோது அவர் சரியாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.


எனவே பீட்டர்பால் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து எனது கணவரை மீட்டுத் தரக்கோரி கடந்த 19.6.2020 வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் ஒன்றை கொடுப்பதற்காக காலையில் எனது தாயாரை அழைத்துக் கொண்டு சென்றேன். அப்போது ஆய்வாளர் இல்லை எனக்கூறி மாலையில் வரக்கூறினார்கள்.

ஆய்வாளர் ரேணுகா

மாலையில் நான், எனது தாயார் மற்றும் எனது சகோதரன் ஆகிய மூவரும் சென்றோம். நான் விஷயத்தை சொன்னேன். அதைக் கேட்டு கொண்ட ஆய்வாளர் ரேணுகா, புகாரை எழுதி தரும்படி கேட்டார். எனக்கு விவரமாக எழுத தெரியாது எனக் கூறினேன். அதற்கு ஆய்வாளர் நான் சொல்லச் சொல்ல நீயே உன் கைப்பட எழுது என்று சொன்னார்கள். நானும் அவர்கள் சொன்னப்படி எழுதினேன்.

அப்படி எழுதும்போது ஆய்வாளர், நானும் எனது கணவரும் 7 வருடங்களாக பிரிந்து இருப்பதாகக் கூறினார்கள். உடனே நான் ஆய்வாளரிடம் ஏழு ஆண்டுகள் இல்லை நான்கு ஆண்டுகள்தான் பிரிந்து வாழ்கிறோம் என்று கூறினேன்.
அதற்கு இன்ஸ்பெக்டர், ஏழு ஆண்டுகள் என்றால் என்ன 4 ஆண்டுகள் என்றால் என்ன எல்லாவற்றுக்கும் ஒரே பிரிவுதான் என்று கூறினார்.

கணவரின் திருமணம்

அதனால் நான் எதுவும் மறுப்பு தெரிவிக்கவில்லை. அந்த புகாரை இன்ஸ்பெக்டர் சொல்ல சொல்ல எழுதியதைத் தவிர நான் சுயமாக எழுதவில்லை. அந்த புகாரை பெற்றுக் கொண்ட ஆய்வாளர், எனக்கு சிஎஸ்ஆரைக் கொடுத்தார்கள்.

பீட்டர்பால் திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து அந்த நிகழ்வுகள் அனைத்தும் சமூகவலைதளங்களில் வந்தும்கூட அந்த திருமணத்தை நிறுத்துவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இன்ஸ்பெக்டர் சரிவர தனது கடமையைச் செய்யாததால் எனது கணவருக்கும் வனிதா விஜயகுமாருக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்து முடிந்துவிட்டது.

நடிகை வனிதா, பீட்டர் பால்

கடமை தவறிவிட்டார்

இன்ஸ்பெக்டர் சரவர தனது கடமையை செய்திருந்தால் நிச்சயமாக 27.6.2020 நடந்த திருமணத்தை தடுத்திருக்க முடியும். தெரிந்தே வேண்டுமென்றே சட்டவிரோதமான அந்த திருமணம் நடப்பதற்கு உதவி செய்துள்ளார்.
எனக்கும் பீட்டர் பாலுக்கும் உள்ள திருமணம் நடைமுறையில் இருக்கும்பொழுது பீட்டர் பாலும்,வனிதா விஜயகுமாரும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த நிகழ்ச்சியில் மூத்த நடிகை உள்பட திரைப்பட துறையைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் கலந்து கொண்டிருக்கிறார்கள். திருமணம் நடந்து முடிந்த பிறகு நான் மீண்டும் இன்ஸ்பெக்டரை சந்தித்து சமூகவலைதளங்களில் வந்த திருமண வீடியோ பதிவு மற்றும் திருமண அழைப்பு ஆகியவற்றை கொடுத்து நடவடிக்கை எடுக்க கூறினேன். இந்த முறையும் இன்ஸ்பெக்டர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வனிதாவால் லாபம்


இன்ஸ்பெக்டர் கடமையை செய்ய தவறிவிட்டார். அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கு பதிவு செய்து பீட்டர் பாலுக்கும் வனிதா விஜயகுமாருக்கும் சம்மன் அனுப்பி அழைத்து விசாரித்து சிறையில் அடைத்திருக்க வேண்டும்.

ஆனால் வனிதா விஜயகுமாரை பார்த்து பயந்தோ அல்லது அவர்களிடம் நல்ல பெயர் வாங்கினால் வேறு லாபங்கள் கிடைக்கும் என்ற கருத்தின் காரணமாக இன்ஸ்பெக்டர் கடமை தவறி ஒரு சட்டவிரோதமான காரியத்துக்கு உடந்தையாக இருந்துள்ளார்.

வடபழனி இன்ஸ்பெக்டர்


நான் எனது புகாரினை 19.6.2020 வடபழனி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வசம் கொடுத்தேன். இதுவரை அந்த புகாரினை பெற்று எந்த நடவடிக்கை எடுக்காமல் வெறுமனே புகார் நிலையிலேயே வைத்துள்ளார்.

இதிலிருந்து வடபழனி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரேணுகா எனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார் என்பது நன்றாக தெரிகிறது. 19.6.2020 நான் கொடுத்த புகார் மீது வழக்குகள் பதிய முகாந்திரம் இருந்தும் வடபழனி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார்.

25 சவரன் நகை


நான் எனது கணவர் பீட்டர் பால் அவர்களுடன் வாழ்ந்த காலகட்டத்தில் என்னிடம் இருந்த 25 சவரன் நகையை பெற்றுக் கொண்டு தற்போது வரை தர மறுக்கிறார். நான் எனது கணவருடன் ஒன்றாக வாழ்ந்த காலகட்டத்தில் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.

வடபழனி அனைத்து மகளிர் நிலைய காவல் இன்ஸ்பெக்டர் ரேணுகா எனது புகாரினை விசாரித்தால் எனக்கு நீதி கிடைக்காது இன்ஸ்பெக்டர் ரேணுகா, சரிவர விசாரிக்காது ஒரு தலைபட்சமாக இருந்தததால் எனது கணவர் 2-வது திருமணம் செய்துள்ளார். எனது வாழ்க்கை வீணாக போனது. எனது குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நீதி வேண்டும்

கல்லூரி படிக்கக்கூடிய வயதில் மகனை வைத்துக் கொண்டு எனது கணவர் 2-ம் திருமணம் செய்துள்ளார். வனிதா விஜயகுமாருக்கு இது 3-வது திருமணம். அவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது எனது கணவர் தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்து வருகிறார். இதுபோன்ற சம்பவங்கள் சமுதாய சீர்கேட்டிற்கு வழிவகுக்கும். இதற்கு மகளிர் இன்ஸ்பெக்டரும் உடந்தையாக இருந்திருக்கிறார்.


எனவே நான் 19.6.2020-ல் கொடுத்த புகாரை விசாரிப்பதற்கு திறமையான மற்றும் உண்மையான இன்ஸ்பெக்டரை நியமனம் செய்து எனது கணவரின் 2-வது திருமணத்தை நடத்தி வைக்க உறுதுணையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு நீதிவழங்கும்படி வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *