கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமல்

கர்நாடகாவில் மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது.

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் 50,000 பேருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. தலைநகர் பெங்களூருவில் நாள்தோறும் 20,000-க்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதையும் மீறி வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. எனவே மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை கர்நாடகா முழுவதும் முழுஊரடங்கு அமல் செய்யப்படுகிறது.

மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும். இதர அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்படுகின்றன. ஆன்லைன், தொலைநிலை கல்வி திட்டம் தொடரலும்.

திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து கேளிக்கை விடுதிகளும் மூடப்படும். சமூக, அரசியல், விளையாட்டு, கேளிக்கை, கல்வி, கலாச்சார, மத நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்படும்.

இவ்வாறு முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *