ஆவடி காவல் ஆணையரக எல்லை வரையறை பணி நிறைவு பெற்றுள்ளது.
சென்னை பெருநகர காவல் துறையை பிரித்து ஆவடி, தாம்பரம் என புதிதாக இரு காவல் ஆணையரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய காவல் ஆணையரகங்களின் எல்லை வரையறுக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
முதல்கட்டமாக ஆவடி காவல் ஆணையரக சட்டம் ஒழுங்கு பிரிவுக்காக அம்பத்தூர், மாதவரம், பூந்தமல்லி ஆகிய 3 காவல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு துணை ஆணையர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் முத்தாபுதுப்பேட்டை, திருநின்றவூர், ஆவடி டேங்க் பேக்டரி, பட்டாபிராம், ஆவடி, திருமுல்லைவாயில், அம்பத்தூர், கொரட்டூர், அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையங்கள் உள்ளன.
மாதவரம் காவல் மாவட்டத்தில் மணலி நியூ டவுன், எண்ணூர், செங்குன்றம், சாந்தாங்காடு, மணலி, மாதவரம் பால் பண்ணை, மாதவரம், புழல் காவல் நிலையங்கள் உள்ளன.
பூந்தமல்லி காவல் மாவட்டத்தில் திருவேற்காடு, பூந்தமல்லி, நசரத்பேட்டை, மாங்காடு, குன்றத்தூர், போரூர் எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலையங்கள் உள்ளன.
ஆவடி காவல் ஆணையரக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் விரைவில் காவல் ஆணையராக நியமிக்கப்படுவார் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.