தாம்பரம் காவல் ஆணையரக எல்லை வரையறை பணி நிறைவு பெற்றுள்ளது.
சென்னை பெருநகர காவல் துறையை பிரித்து ஆவடி, தாம்பரம் என புதிதாக இரு காவல் ஆணையரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய காவல் ஆணையரகங்களின் எல்லை வரையறுக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
முதல்கட்டமாக தாம்பரம் காவல் ஆணையரக சட்டம் ஒழுங்கு பிரிவுக்காக குரோம்பேட்டை, பள்ளிக்கரணை, வண்டலூர் ஆகிய 3 காவல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு துணை ஆணையர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
குரோம்பேட்டை காவல் மாவட்டத்தில் சங்கர்நகர், பல்லாவரம், குரோம்பேட்டை, சிட்லபாக்கம், தாம்பரம், சேலையூர் காவல் நிலையங்கள் உள்ளன.
பள்ளிக்கரணை காவல் மாவட்டத்தில் துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, கண்ணகிநகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, தாழம்பூர், கேளம்பாக்கம் காவல் நிலையங்கள் அமைந்துள்ளன.
வண்டலூர் காவல் மாவட்டத்தில் சோமங்கலம், பீர்க்கன்கரணை, மணிமங்கலம், ஒட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் காவல் நிலையங்கள் உள்ளன.
ஆவடி காவல் ஆணையரக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் டிஜிபி எம்.ரவி விரைவில் காவல் ஆணையராக நியமிக்கப்படுவார் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.