மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்கள், ஆணையமாக மாற்றம்

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்கள், ஆணையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் செயல்படுகின்றன. மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் சென்னையிலும் அதன் கிளை மதுரையிலும் இயங்கி வருகின்றன.

நிவாரணம் கோரும் தொகை ரூ.20 லட்சத்துக்குள் இருந்தால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரலாம். ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இழப்பீடு கோரும் வழக்குகள் மாநில நுகர்வோர் ஆணையத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. 

இந்நிலையில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்கள், ஆணையமாக மாற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் இனிமேல் ரூ.1 கோடி வரை இழப்பீடு கோரும் வழக்குகளையும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் விசாரிக்க முடியும். 

ரூ.10 கோடி வரையிலான இழப்பீடு கோரும் வழக்குகளை மாநில ஆணையம் விசாரிக்கும். ரூ.10 கோடிக்கு மேல் நிவாரணம் கோரும் வழக்குகளை தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் விசாரிக்கும். 

இதற்கு முன்பு எந்த பொருள் வாங்கினாலும் அந்த பொருளை தயாரித்த அல்லது விற்பனை செய்த நிறுவனம் எங்கு உள்ளதோ அங்குள்ள குறைதீர் மன்றத்தில் மட்டுமே வழக்கு தொடர முடியும். புதிய நடைமுறையின்படி பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நுகர்வோர் குறைதீர் மன்றத்திலேயே வழக்கு தொடரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *