சிபிஎஸ்இ பள்ளிகள் மீது அவமதிப்பு வழக்கு

முழு கட்டணம் வசூலித்த சிபிஎஸ்இ பள்ளிகள் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஐகோர்ட் உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த 9 சிபிஎஸ்இ பள்ளிகள் மீது சென்னை ஐகோர்ட், அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. ஐகோர்ட் உத்தரவின்படியே கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்த பள்ளிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் அவற்றின் மீதான அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 

இதனிடையே கோவை வடவள்ளி, செருகம்பாக்கத்தை சேர்ந்த 2 சிபிஎஸ்இ பள்ளிகள் முழு கட்டணம் வசூலித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன்பேரில் அந்த 2 பள்ளிகள் மீதும் ஐகோர்ட், புதிதாக அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *