இந்தியாவில் 55,342 பேர்.. தமிழகத்தில் 4,666 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று 55,342 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களில் புதிய தொற்று 55 ஆயிரமாக குறைந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
நாடு முழுவதும் இதுவரை 71,75,880 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 62,27,295 பேர் குணமடைந்துள்ளனர்.
தேசிய அளவில் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 86.78 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மிகஅதிகபட்சமாக தாதர்- நாகர் ஹவேலி- டையூ – டாமன் யூனியன் பிரதேசத்தில் 96.25 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். அந்தமானில் 93.98% பேர், பிஹாரில் 93.89% பேர் குணமடைந்துள்ளனர்.
கேரளா கடைசி வரிசையில் உள்ளது. அந்த மாநிலத்தில் குணமடைவோர் சதவீதம் 66.31 சதவீதமாக மட்டுமே உள்ளது.
நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 8,38,729 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 706 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,09,856 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 7,089 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. கடந்த செப்டம்பரில் புதிய தொற்று 25 ஆயிரம் வரை தொட்ட மகாராஷ்டிராவில் கரோனா பரவலை கணிசமாகக் குறைந்துள்ளது.
அந்த மாநிலத்தில் 15,35,315 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,81,896 பேர் குணமடைந்துள்ளனர். 40,514 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் நேற்று 3,224 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 7,58,951 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,08,951 பேர் குணமடைந்துள்ளனர். 6,256 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் நேற்று 7,606 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறிய்பபட்டது. அந்த மாநிலத்தில் 7,17,915 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 5,92,084 பேர் குணமடைந்துள்ளனர். 10,036 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 4,666 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை 6,65,930 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,12,320 பேர் குணமடைந்துல்ளனர். 43,239 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 57 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 10,371 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1,164 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. கோவையில் 398 பேர், செங்கல்பட்டில் 252 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் இதுவரை 4,39,161 பேர், டெல்லியில் 3,11,188 பேர், மேற்கு வங்கத்தில் 2,98,389 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 8,764 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 3,03,896 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 2,07,357 பேர் குணமடைந்துள்ளனர். 95,407 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1,046 பேர் உயிரிழந்துள்ளனர்.