கொரோனா படுக்கை விவரங்களை இணையத்தில் அறியலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான காலி படுக்கைகளின் விவரங்களை https://tncovidbeds.tnega.org/ என்ற இணையதளம் மூலம் அறியலாம். இந்த இணையதளம் மூலம் சாதாரண படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன்கூடிய படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.