கொரோனா பாதிப்பு 62 லட்சத்தை தாண்டியது…

கொரோனா பாதிப்பு 62 லட்சத்தை தாண்டியது… இதில் 51.87 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 80 ஆயிரத்து 472 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62 லட்சத்து 25 ஆயிரத்து 763 ஆக உயர்ந்துள்ளது. இதில் 51 லட்சத்து 87 ஆயிரத்து 825 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 9 லட்சத்து 40 ஆயிரத்து 441 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இன்று 1,179 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 97 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது.

முதலிடத்தில் மகாராஷ்டிரா

வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 14 ஆயிரத்து 976 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.

அந்த மாநிலத்தில் 13 லட்சத்து 66 ஆயிரத்து 129 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 10 லட்சத்து 69 ஆயிரத்து 159 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 60 ஆயிரத்து 789 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 36 ஆயிரத்து 181 பேர் உயிரிழந்துள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 10 ஆயிரத்து 453 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 5 லட்சத்து 92 ஆயிரத்து 911 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.
மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.

இதில் 4 லட்சத்து 76 ஆயிரத்து 378 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 756 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 ஆயிரத்து 777 பேர் உயிரிழந்துள்ளனர்.

3-வது இடத்தில் கேரளா

கேரளாவில் இன்று 8 ஆயிரத்து 830 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 106 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 224 பேர் குணமடைந்துள்ளனர்.

67 ஆயிரத்து 61 பேர் சிகிச்சையில் உள்ளனர். 742 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் நான்காவது இடத்தில் இருந்த கேரளா தற்போது 3-வது இடத்துக்கு சென்றுள்ளது.

4-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் புதிதாக 6 ஆயிரத்து 190 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 6 லட்சத்து 87 ஆயிரத்து 351 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

இதில் 6 லட்சத்து 22 ஆயிரத்து 136 பேர் குணமடைந்துள்ளனர். 59 ஆயிரத்து 435 பேர் சிகிச்சையில் உள்ளனர். 5 ஆயிரத்து 780 பேர் உயிரிழந்துள்ளனர். 5-வது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் 52,160 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

6-வது இடத்தில் தமிழகம்

வைரஸ் பாதிப்பில் 6-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 659 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

இதன்மூலம் தமிழகத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 97 ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 819 பேர் குணமடைந்துள்ளனர். 46 ஆயிரத்து 263 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 67 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 9 ஆயிரத்து 520 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 1,295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தலைநகர் சென்னையில் வைரஸ் தொற்று அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

கோவையில் 574 பேர், சேலத்தில் 378 பேர், செங்கல்பட்டில் 335 பேர், திருவள்ளூரில் 275 பேர், தஞ்சாவூரில் 266 பேர், காஞ்சிபுரத்தில் 207 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஒடிசாவில் 33,367 பேர், அசாமில் 32,539 பேர், சத்தீஸ்கரில் 31,225 பேர், தெலங்கானாவில் 29,326 பேர், டெல்லியில் 27,524 பேர், மேற்குவங்கத்தில் 26,064 பேர், மத்திய பிரதேசத்தில் 21,317 பேர்,

ராஜஸ்தானில் 20,376 பேர், காஷ்மீரில் 17,414 பேர், பஞ்சாபில் 16,824 பேர், குஜராத்தில் 16,676 பேர், ஹரியாணாவில் 14,804 பேர், பிஹாரில் 12,366 பேர், ஜார்க்கண்டில் 11,942 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *