இதுவரை 20 லட்சம்..ஒரே நாளில் 62,538.. காட்டுத் தீயாக பரவுகிறது கொரோனா

கடந்த ஒரு வாரமாக புதிய கொரோனா வைரஸ் தொற்று அரை லட்சமாக இருந்து வந்தது. மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 62 ஆயிரத்து 538 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 27 ஆயிரத்து 886 ஆக உயர்ந்துள்ளது. இதில் 13 லட்சத்து 78 ஆயிரத்து 105 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 லட்சத்து 7 ஆயிரத்து 384 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நாடு முழுவதும் ஒரே நாளில் 886 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 41 ஆயிரத்து 585 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 514 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 70 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது.

இதில் மூன்றரை லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஒன்றரை லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 316 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த மாநிலத்தில் இதுவரை 16 ஆயிரத்து 792 பேர் உயிர்பலியாகி உள்ளனர்.
தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

தமிழக்ததில் 2 லட்சத்து 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 லட்சத்து 21 ஆயிரம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 53 ஆயிரம் பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.
3-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 10 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மும்பையில் உள்ள கொரோனா மருத்துவமனை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.
மும்பையில் உள்ள கொரோனா மருத்துவமனை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 786 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 82 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
3-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் புதிதாக 6 ஆயிரத்து 805 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

தலைநகர் பெங்களூருவில் மட்டும் 2 ஆயிரத்துக்கு 500 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடமாநிலங்களில் உத்தர பிரதேசம், மேற்குவங்கத்தின் நிலைமை மோசமாக உள்ளது.

தலைநகர் டெல்லி வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுள்ளது. அங்கு ஒன்றரை லட்சம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் 10 ஆயிரம் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். புதிய வைரஸ் தொற்று 500-க்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *