சென்னை உள்பட 6 மாவட்டங்களில்கொரோனா தொற்று குறையவில்லை

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறையவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் 39 ஆயிரம் தெருக்கள் உள்ளன. இதில் 1,000 தெருக்களில் தொடர்ந்து 5 முதல் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்து கொண்டே இருக்கிறது. இதேபோல திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூரிலும் கொரோனா வைரஸ் தொற்று குறையாமல் தொடர்ந்து பாதிப்பு இருந்து வருகிறது. 

எனவே கொரோனா தொற்று இல்லை என்று எண்ண வேண்டாம். 6 மாவட்டங்களின் மக்களும் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *