கர்நாடகா, கேரளாவில் கோரத்தாண்டமாடும் கொரோனா

கர்நாடகா, கேரளாவில் கொரோனா கோரத்தாண்டமாடுகிறது.

கடந்த மார்ச் மத்தியில் இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தொடங்கியது. அப்போது முதல் நாடு முழுவதும் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. முதலில் வடமாநிலங்களில் கொரோனா கோரதாண்டமாடியது.

தற்போது கர்நாடகா, கேரளாவில் கோரத்தாண்டமாடி வருகிறது. கர்நாடக சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் மாநிலம் முழுவதும் 50,112 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பெங்களூருவில் மட்டும் 23,106 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 346 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் இன்று 41,953 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் ஊரடங்குக்கு இணையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. எனினும் கேரளாவில் கட்டுக்கடங்காமல் கொரோனா பரவி வருகிறது.

அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழகம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *