பல்கலைக்கழகம், கல்லூரிகளில் கொரோனா மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் கொரோனா மையங்கள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது 10 கல்லூரிகளில் கொரோனா மையங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், கொரோனா மையங்களை அமைக்க அந்த கல்லூரி நிர்வாகங்கள் முன்வந்துள்ளன.
முதல்கட்டமாக 40 கல்லூரிகளிலும் சுத்தமான குடிநீர், கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு 5,000 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட உள்ளன என்று உயர் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.