மே 10-ம் தேதி முதல் கொரோனா நிவாரண நிதி விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றார். முதல் நாளில் அவர் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், கொரோனா நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4,000 வழங்கப்படும் என்ற கோப்பில் அவர் முதல் கையெழுத்திட்டார்.
இதன்படி அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரணம் வழங்கப்படும். ரூ.4 ஆயிரம் நிதி அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டத்தை தொடங்கி வைப்பார் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.