கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கும் தடுப்பூசி போடலாம்

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கும் தடுப்பூசி போடலாம் என்று தமிழக பொது சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் வினய்குமார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி  போடும் பணி தொடங்கியது. முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கியது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டுமா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் வினய்குமார் விளக்கம் அளித்துள்ளார். 

“கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் உடலில் எதிர்ப்பாற்றல் உருவாகிவிடும். கரோனா வைரஸ் மீண்டும் அவர்களது உடலில் செல்லும்போது டி செல்கள், கொரோனா கிருமியை அழித்துவிடும். அவர்களுக்கு தடுப்பூசி அவசியம் இருக்காது. 

எனினும் சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கலாம். அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் அது மிகுந்த பலனளிக்கும். கொரோனாவில் இருந்து குணமடைந்த இரு வாரங்களுக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். அவர்களுக்கும் இரு தவணையாக தடுப்பூசி போட வேண்டும்” என்று டாக்டர் வினய்குமார் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *