5.85 லட்சம் பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் நோயாளிகள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் புதிதாக 4,878 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதுவரை 1,74,761 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 7,855 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் தேசிய அளவில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 049 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. அங்கு 87,360 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 2,742 பேர் உயிரிழந்துள்ளனர். நான்காவது இடத்தில் உள்ள குஜராத்தில் 32,557 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,846 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் 23,492, மேற்குவங்கத்தில் 18,559, ராஜஸ்தானில் 18,014, தெலங்கானாவில் 16,339, கர்நாடகாவில் 15,242, ஆந்திராவில் 14,595, ஹரியாணாவில் 14,548, மத்திய பிரதேசத்தில் 13,593, பிஹாரில் 10,043, அசாமில் 8,227, காஷ்மீரில் 7,497, ஒடிசாவில் 7,065, பஞ்சாபில் 5,568, கேரளாவில் 4,593 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஒரே நாளில் 18,653 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 5,85,493 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 507 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் உயிரிழப்பு 17,400 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 3,47,979 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. அதேநேரம் நாள்தோறும் ஏற்படும் வைரஸ் தொற்று கவலையளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *