சென்னை போலீஸாருக்கு கொரோனா தடுப்பு முகக்கவசம் வழங்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல் துறை சார்பில் 23 ஆயிரம் போலீஸார், ஊர்க்காவல் படை வீரர்கள் கொரோனா தடுப்பில் முன்கள பணியாளர்களாக சேவையாற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு கொரோனா தடுப்பு முகக்கவசங்களை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வியாழக்கிழமை வழங்கினார்.
ஒரு நபருக்கு தலா 3 முகக்கவசங்கள், 5 சானிடைர் பாட்டில்கள், ஒரு முக பாதுகாப்பு கேடயம் ஆகிய தொகுப்பு வழங்கப்பட்டது.
வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மேற்கு மண்டல போலீஸார் சார்பாக அம்பத்தூர் மாவட்ட துணை ஆணையர் தீபா சத்யன் முகக்கவசங்களை பெற்றுக் கொண்டார்.