கொரோனா கொள்ளை.. மருத்துவமனை மீது நடவடிக்கை…

கொரோனா கொள்ளை.. மருத்துவமனை மீது நடவடிக்கை… எடுக்க சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை ராஜாமில் ரோடு பகுதியை சேர்ந்த நேருவும் அவரது மனைவியும் மதுரை வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர்.

இருவருக்கும் கொரோனா அறிகுறிகள் இருப்பதாகக் கூறிய மருத்துவமனை நிர்வாகம், முன்பணமாக ரூ.8 லட்சத்தை செலுத்த கோரியது.

அதன்படி நேரு முன்பணமாக ரூ.8 லட்சத்தை செலுத்தினார். பரிசோதனை முடிவில் இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

எனவே முன்பணமாக செலுத்திய பணத்தை நேரு திரும்ப கோரினார். ஆனால் ரூ.1.05 லட்சத்தை மட்டுமே மருத்துவமனை நிர்வாகம் வழங்கியது.

இதுதொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் நேரு வழக்கு தொடர்ந்தார். நீதிபதி சுவாமிநாதன் வழக்கை விசாரித்தார்.

“தனியார் மருத்துவமனையில் மோசடி குறித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மனுதாரர் புகார் அளிக்கலாம்.

மனுதாரர் அளிக்கும் புகார் மீது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விசாரணை நடத்தி 16 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *